• Fri. Feb 14th, 2025

சனாதன சர்ச்சை குறித்து, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி…

ByKalamegam Viswanathan

Sep 5, 2023

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்னை செல்வதற்காக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

இந்தியா கூட்டணி காங்கிரஸ் முக்கியத்துவம் குறித்த கேள்விக்கு:

வேணுகோபால் காங்கிரஸ் கட்சி அமைப்புச் செயலாளராக உள்ளார். இந்தியா கூட்டணியை பொறுத்த அளவில் மேலிருக்கும் தலைவர்கள் கொள்கை முடிவு எடுப்பார்கள். நடைமுறைப்படுத்த மற்ற தலைவர்கள் இருக்கிறார்கள். சரத் பவர் தலைமையில் இந்த குழுக்கள் செயல்படுவார்கள். 15 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் கூட்டணி குறித்து பேசுவது, கட்சிகளுக்குள் இடையே உள்ள கருத்து வேறுபாடு குறித்து பேசுவது போன்ற பணிகளை செய்வார்கள்.

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது குறித்த கேள்விக்கு,

தனிப்பட்ட முறையில் என்னை பொறுத்தவரை தலைவராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும். உங்களுக்கு பிரதமர் பதவி என்பது முக்கியமில்லை, பாசிச பாரதிய ஜனதா கட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் அதற்காகத்தான் கூட்டணி சேர்த்து உள்ளோம் என்று நீங்கள் கட்சித் தலைவர் தெளிவாக கூறியுள்ளார். எனவே இது குறித்து தேர்தலுக்கு பிறகு முடிவு எடுப்பார்கள். விற்பனைக்கு பிறகு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியது மற்றும் அவர் தலைக்கு 10 கோடி அறிவிப்பு குறித்த கேள்விக்கு,

மொழி மாற்ற முடியாது என்பதுதான் சனாதனம். ஒரு அரசியல் கட்சிக்கும் ஒரு கொள்கை உள்ளது. சாதனத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளாத கட்சி. சில மதத்தலைவர்கள் சனாதனத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். தேர்தல் வருவதால் இந்து மக்களின் எண்ணத்தை தூண்டி விடுவதற்காக, இந்துக்களின் மாற்ற வேண்டியதற்காக பாஜக இதற்கு பின்னிருந்து வேலை செய்கிறது. சமத்துவம் சகோதரத்துவம் என்பது தான் காங்கிரஸ் கட்சியின் கொள்கை. இந்த நாட்டில் பிறந்த அனைவருக்கும் சம உரிமை உண்டு. இதில் ஏற்றத்தாழ்வுக்கு இடமில்லை.

காங்கிரஸ் காவி பூசி பாஜக என்று சீமான் விமர்சனம் கேள்விக்கு,

சீமான் எந்த நேரத்தில் யாரை விமர்சிப்பார் என்று சொல்ல முடியாது. அவரைப் பற்றி கருத்து தெரிவிக்க தேவையில்லை என்றார்.