

மதுரை வலையங்குளம் பகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு சிறப்பு மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டு பணிகள் நடைபெறுவதை மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ மாநாடு நடைபெறும் இடங்களை ஆய்வு செய்து மாநாட்டிற்கான மேடை. பார்வையாளர்கள் அமருமிடம். வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவற்றை ஆய்வு செய்து சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் மாவட்ட செயலாளர் முனியசாமி மாரநாடு மற்றும் தொண்டரணி செயலாளர் சுருதி ரமேஷ். பொடா கணேசன் திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் மருதுபாண்டி ஆகியோரிடம் ஆலோசனைகளை வழங்கினார்.

