விருதுநகர், டிச. 13- விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் நாளை 13ம் தேதியும் நாளை மறுநாள் 14ஆம் தேதியும் கழக அமைப்புத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பொறுப்பாளர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் கே..டி.ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினர்.

அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் கன்னியாகுமரி, தென்காசி , விருதுநகர், மதுரை கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், பெரம்பலூர் உட்பட 15 மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள், பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள், நகரங்களுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட வட்டக் கழக நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான முதல்கட்ட தேர்தல், வரும் டிச.13, 14 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது.
அதன்படி விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிகள் 5 இடங்களிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 9 இடங்களிலும், சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 6 இடங்களிலும், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 4 இடங்களிலும் இந்தத் தேர்தல் நடைபெறுகின்றது. தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் நடத்த விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த தேர்தல் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கருக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி சால்வை அணிவித்து வரவேற்றார். தேர்தலில் எப்படி பணியாற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம் விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரில் நேற்று நடைபெற்றது.தேர்தல் பொறுப்பாளர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் கே..டி.ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில் திருவி்லலிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ், சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து தேர்தல் பொறுப்பாளர்களிடம் தேர்தல்களை நடத்துவதற்கான வாக்காளர் பட்டியல், மினிட் புத்தகம்,விண்ணப்ப படிவம், ரசீது புத்தகம், வெற்றிப் படிவம் முதலானவற்றை முன்னாள் அமைச்சர்கள் கே..டி.ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் வழங்கினர்.