தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரேநாளில் 17,370 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார். கடும் கோடைவெப்பம் காரணமாக வீடுகளின் மின்சார பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது. ஏசி.மின்விசிறி போன்ற சாதனங்கள் அதிகளவில் பயன்படுத்தபடுகின்றன.இந்நிலையில் இதுவரை இல்லாத அளவில் நேற்று மட்டும் தமிழகத்தில் 17,370 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் …ஒரு நாள் மின்பயன்பாடு வரலாற்றில் இல்லாத வகையில் நேற்று ஒரேநாளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த மாதம் 27ம் தேதி 17,196 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதே ஒருநாளின் அதிகபட்ச பயன்பாடாக இருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார். நேற்று தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 387.047 மில்லியன் யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மெகாவாட் அளவில் 17,370 MW.இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு மார்ச் 2022 இறுதியில், 378.328மி.யூ / 17,196 MW’ என பதிவிட்டுள்ளார்.
இன்னும் சில தினங்களில் அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ள நிலையில் மேலும் மின்சார பயன்பாடு அதிகரிக்கும்.
தமிழக வரலாற்றில் முதல் முறையாக நேற்று ஒரேநாளில் 17,370 மெகாவாட் மின்சாரம் உபயோகம் -செந்தில் பாலாஜி தகவல்
