• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கோவை தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நேர்த்திக்கடன் நிகழ்ச்சி..,

BySeenu

Apr 22, 2026

கோவையின் குலதெய்வம் என்று அழைக்கப்படும் தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் இன்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும் அலகு குத்தியும் பால்குடம் கரகம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோனியம்மன் கோவிலில் இருந்து துவங்கிய இந்த நேர்த்திக்கடன் ஊர்வலம் டவுன்ஹால், நஞ்சப்பாசாலை வழியாக வந்து தண்டு மாரியம்மன் கோவிலில் நிறைவு பெற்றது.

வழி நெடுகும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்கு பல்வேறு தன்னார்வலர்களும் பொதுமக்களும் குடிநீர் பழங்கள் ஆகியவற்றை வழங்கினர். அதனைத் தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெறும்.

இந்நிகழ்வை முன்னிட்டு இப்பகுதியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். போக்குவரத்தும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.