

திருவாடானை அருகே வடக்கூரில் கடந்த 10 வருடங்களுக்கு பிறகு நடவு பணியில் நாற்று நட்டு விவசாயம் பார்க்க விவசாயிகள் ஆர்வம், மழை அதிகமாக பெய்ததால்
திருவாடானை பகுதிகளில் கடந்த காலங்களில் விதைத்து பயிரிட்டு வந்த நிலையில் தற்போது விதைப்பதற்கு முன்பாகவே கனமழை பெய்தது. அதனால் ஆங்காங்கே வயல்களில் தண்ணீர் தேங்கியிருந்தது அதனால் விதைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் விதைப்பு காலமும் கடந்துவிட்டது. ஒரு சில பெரு விவசாயிகள் நாற்று நட்டு அதன் மூலம் நாற்று நடவு செய்வதை கடந்த 10 வருடங்களுக்கு பிறகு தற்பொழுது ஆர்வமாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.
அப்படி இன்று வடக்கூர் கிராமத்தை சேர்த்த ஏகாம்பரம் என்பவரது விவசாயின் வயலில் பெண்கள் 40 ஆண்கள் 40 பணியில் இருந்தனர். ஆண்கள் நாற்றை பிடிங்க பெண்கள் நாற்று நட்டனர். இந்த காட்சியை கடந்த 10 வருடங்களுக்கு பிறகு பார்ப்பது ரம்மியமாக இருந்தது. குறுகியகால பயிராக இருப்பதாலும், அதிக மழை பெய்ததால் விதைக்க முடியாததால் நாற்று நடப்பட்டது. அவ்வாறு நாற்று நடும் பெண்கள் தங்களின் பணியில் சோர்வு அடையாமல் இருக்க கிராமத்த பாடல் பாடுவது, குலவை போடுவது என்று செய்து வருகிறார்கள்.
