

திருவாடானை திங்கள்கிழமை சந்தை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பராமரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 42 நாட்களுக்கு, முப்பத்தி ஆறு லட்சம் ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டு தனியார் சந்தை நடத்தி வருகிறார்கள். இந்த சந்தையில் ஆடுகள் விற்பனை அதிக அளவில் நடைபெறுவது ஆண்டாண்டு காலமாக வழக்கமாக நடைபெற்று வருகிறது.
இந்த சந்தைக்கு திருவாடானை மட்டுமல்லாது ராமநாதபுரம் மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம், மதுரை திண்டுக்கல், நத்தம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருவது வழக்கம் இன்னும் மூன்று தினங்களில் தீபாவளி பண்டிகை நடைபெற உள்ள நிலையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் நடைபெற்றுள்ளது ஆடுகள் விலையும் சற்று அதிகமாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
