• Sat. Apr 20th, 2024

தஞ்சையில் கோலாகலாமாக ஆரம்பித்த நாட்டுப்புற கலைவிழா..

Byகாயத்ரி

Mar 17, 2022

தஞ்சாவூரில் தேசிய நாட்டுப்புற மற்றும் பழங்குடியின கலைஞர்களின் கலைவிழா,தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிகழ்வில் தமிழ்நாடு, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகம், குஜராத், புதுச்சேரி, தெலங்கானா, ஒடிசா, மத்தியபிரதேஷம், பஞ்சாப், உத்தரபிரதேசம், இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 30 குழுக்களை சேர்ந்த 450 கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.இந்த கலைவிழாவானது வருகிற மார்ச் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை அடுத்து இதில் 40 அரங்குகளில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடக்கிறது. மேலும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் 11 குழுவினர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி, கண்காட்சி மற்றும் உணவு அரங்கம் நடைபெறுகிறது. இந்நிகழ்வானது நாள்தோறும் மாலை 4:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை நடைபெறும் எனவும் இதற்கான அனுமதி இலவசம் என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *