பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.கொரோனா பரவல் காரணமாக பல கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது பரவல் குறைந்துள்ளதால் பழனி முருகன் கோவிலியில் பக்தர்கள் திரளானோர் வழிபட வந்தனர். மலை அடிவாரத்தில் மாலை 4 மணிக்கு தேரோட்டம்; பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.