• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

வேனில் கொண்டு வந்த ரூ 10 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல்..,

ஒட்டன்சத்திரத்தில் தனியார் நெய் நிறுவனத்திற்கு உரிய ஆவணம் இன்றி பிக்கப் வேனில் கொண்டு வந்த ரூ 10 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி – கமலாபுரம் நான்கு வழி சாலையில் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நாகனம்பட்டி பிரிவில் ஒட்டன்சத்திரம் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மரிய பிரபாகரன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது கன்னிவாடியை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் சுபாஷ் ஓட்டி வந்த மகேந்திரா பிக்கப் வேனை சோதனை செய்த போது டிரைவர் சீட்டின் அருகில் உரிய ஆவணம் இன்றி மறைத்து வைத்து தனியார் நெய் தயாரிக்கும் நிறுவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 10 லட்சத்தை தேர்தல் பறக்கும் பணியினர் கைப்பற்றினர்.

அந்த பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபு மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சஞ்சீவ் காந்தி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

பணத்தை சரி பார்த்து திண்டுக்கல் வருமான வரித்துறை அதிகாரியிடம் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒப்படைத்தனர்.