மதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் சரகம் கூட கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரபத்தி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் (38) நாச்சம்மாள் தம்பதியினர் தம்பதிக்கு ஒரு ஆண் இரண்டு பெண் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

மூத்த மகன் மோகன் (4)நேற்று மாலை வீட்டில் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.முருகன் வேலைக்கு சென்ற நிலையில் தாய் நாச்சம்மாள் ஆடு மேய்க்க சென்று விட்டு மாலை 6 மணியளவில் வீடு திரும்பி உள்ளார். அப்போது இரண்டு மகள்கள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர் நான்கு வயது சிறுவன் மோகன் மட்டும் வீட்டில் இல்லாததை கண்டு அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளார். யாரும் சிறுவனை பார்க்கவில்லை என கூற அப்போதுதான் தனது மகன் காணாமல் போனது தெரிய வந்தது.

இதையடுத்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து சிறுவன் காணாமல் போனது தொடர்பாக மோகனின் தந்தை முருகன் அருகிலுள்ள கூடக்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாவட்ட எஸ்பி தேவநாதனுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தனிப்படை போலீசார் பாரபத்தி கிராமத்தில் விசாரணை மேற்கொண்டதில் அதே ஊரைச் சேர்ந்த முருகனின் உறவினரான கிருஷ்ணன் என்பவரது மகன் மணி (18) இரவில் சாக்கு மூட்டை ஒன்றை தூக்கிக் கொண்டு சென்றதாக தெரிவித்ததை அடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மணியை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் முதலில் மறுத்த மணி பின்னர் 4 வயது சிறுவனைகொலை செய்து குவாரி பள்ளத்தில் போட்டு விட்டதாக போலீசாரிடம் தெரிவிக்க அதிர்ச்சி அடைந்த தனிப்படை போலீசார் அவனை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது சாக்கு மூட்டையில் சிறுவன் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் திருமங்கலம் டிஎஸ்பி இமயவர்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன்,டிஎஸ்பி இமயவர்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு இறந்த சிறுவன உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து மணியை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் வாலிபர் மணி இறந்த சிறுவன் தந்தை முருகன் குடும்பத்திற்கும் தனக்கும் பிடிக்காது என்பதால் கஞ்சா போதையில் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவித்ததாகவும் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தனது பெரியப்பா மகளுக்கும் இறந்த சிறுவனின் சித்தப்பாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்து அவர்களை பழி வாங்கும் நோக்கில் முருகன் மகனான நான்கு வயது சிறுவன் மோகன் நேற்று மாலை தனது வீட்டின் அருகே விளையாடு கொண்டிருந்தான்.

அவனை தனியாக அழைத்துச் சென்று தன்னுடைய வீட்டின் பின்புறம் பயன்பாட்டில் இல்லாத கழிப்பறைக்குள் கொண்டு சென்று சிறுவனை கீழே படுக்க வைத்து அவனது கால்களை மிதித்து சிறுவன் கத்தி விடக்கூடாது என்பதற்காக அவன் வாயை பொத்தி கையில் வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க சிறுவனின் உடலை சாக்கில் கட்டி தோளில் சுமந்து சென்று ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குவாரி பள்ளத்தில் போட்டுவிட்டு யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க வீட்டில் வந்து படுத்து உறங்கியதாக போலீசாரிடம் தெரிவித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலையாளி மாறி மாறி பேசுவதால் கொலைக்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் காணாமல் போனதாக உறவினர்கள் தேடி வந்த நிலையில் உறவினரான 18 வயது வாலிபரால் காணாமல் போன சிறுவன் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பாரப்பத்தி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




