• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

எழுமலையில் 20 ஆண்டுகளுக்குப் பின் அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ- மாணவிகள் சந்திப்பு..,

ByP.Thangapandi

Oct 4, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2004-2006 ம் ஆண்டுகளில் 11 மற்றும் 12 ம் வகுப்பு பயின்ற மாணவ -மாணவிகள் 20 ஆண்டுகளுக்குப் பின்பு சந்திப்பு நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.,

இதில் தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களை நெகிழ்ச்சியோடு வரவேற்று அவர்களுக்கு பொன்னாடை, மாலை மற்றும் நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தனர்.,

தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் எவ்வாறு பயின்றோம் என ஆசிரியருடன் கலந்துரையாடல் செய்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.,

இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ மாணவிகள் கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், இந்திய ராணுவம், அரசு பணி மற்றும் சுயதொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தனர்.,

இதில் தங்கள் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவரும் தற்போது மாவட்ட கல்வி அலுவலருமான செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.,

தொடர்ந்து பள்ளி வளர்ச்சிக்காக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை நினைவு பரிசாக வழங்கியும் மேலும் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்., இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி நினைவுகளை பசுமையாக்கினர்.,

மேலும் 20 ஆண்டுகளுக்குப் பின்பு சந்தித்த முன்னாள் மாணவ மாணவிகள் தங்களது பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டு அன்பை பரிமாறிக் கொண்டனர்., இந்த நிகழ்வு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.,