• Mon. Sep 28th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

குடிநீர் கேட்டு பொதுமக்கள் நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம்..,

ByPuthar Pandian P

Sep 28, 2026

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சியில் கடந்த 4 மாதங்களாக குடிநீர் சப்ளை இல்லாமல் பகுதியில் உள்ள மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்
இதனை கண்டித்து திமுக பேரூர் கழக செயலாளர் ஜோசப் கோயில் பிள்ளை தலைமையில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் பேரூராட்சி அலுவலகத்தில் ஈடுபட்டனர்.

நிலக்கோட்டை பேரூராட்சியில் காவிரி தண்ணீர் வைகை ஆற்று தண்ணீர் வருவதில்லை, ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் குறைந்து தண்ணீர் இல்லாத நிலைக்கு ஆளாகி வருகின்றனர், நிலக்கோட்டை பேரூராட்சிக்கு காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 6 லட்சம் லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும், ஆனால் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே சப்ளை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

நிலக்கோட்டை பேரூராட்சி புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டுகள் நிலவுகிறது, நிலக்கோட்டை பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சனை தீர்க்க நடவடிக்கை எடுக்க விட்டால் போராட்டம் தொடரும் என எச்சரித்தனர்.