• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சாத்தூரில் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி…..

ByK Kaliraj

Oct 4, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடுமையான கோடை வெப்பம் வாட்டி வதைத்தது.

இந்தநிலையில் மதிய வேளைக்கு பிறகு வானம் மேக மூட்டமாகவும் கரு மேகங்கள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் மாலையில் சரசரவென சாரல் மழையுடன் தொடங்கி பின்பு சிறிது நேரத்தில் கனமழையாக கொட்டி தீர்த்தது.

சாத்தூர் அண்ணா நகர் படந்தால் வெங்கடாசலபுரம் சிந்தப்பள்ளி மேட்டமலை சின்னக்காமன்பட்டி இருக்கன்குடி அமீர்பாளையம் சடையம்பட்டி சத்திரப்பட்டி மேட்டுப்பட்டி சல்வார் பட்டி இரவார் பட்டி சுப்பிரமணியபுரம் தாயில்பட்டி நென்மேனி உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பரவலான மழை பெய்தது.

நீண்ட நாட்களுக்கு பின்னர் பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாலை நேரத்தில் தொடங்கிய கனமழை தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.