

இந்தியாவில் முதன்முறையாக கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோரயில்அமைக்க பணிகள் நடைபெறுவதாக தகவல்
கொல்கத்தாவில்கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் மெட்ரோ ரயில் பாதை இந்தியாவின் முதல் முறையாக நீருக்கடியில் அமைக்கப்படுகிறது. இதற்காக ஹூக்ளி ஆற்றுக்கு அடியில் மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 16.55 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த சுரங்கப்பாதையில் 9.30 கிலோமீட்டருக்கு மேல் பணிகள் முடிந்த நிலையில் மீதமுள்ள 7.25 கிலோமீட்டருக்கான பணிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடியும் என கொல்கத்தா மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.