உத்தரப்பிரதேசம் மகா கும்பமேளாவில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக மகா கும்பமேளா தற்போது நடை பெற்று வருகிறது. இந்த விழா உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெரும் விழாவையொட்டி உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்மத்தில் புனித நீராடி வருகின்றனர்.
மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடியிருப்பில் கியாஸ் சிலிண்டர்கள் நேற்று அடுத்தடுத்து வெடித்தது. இதனால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த விபத்தீல் 18 கூடாரங்கள் எரிந்து சேதமடைந்தன.
இந்த விபத்து குறித்து அகரா காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கர் மிஸ்ரா கூறுகையில், “மகா கும்பமேளாவின் செக்டார் 19-ல் இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை” என்றார்.
இதனிடையே, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு தீ விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.