தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் தவறான செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக பல்வேறு தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவனங்கள் தவறான செய்திகளை வெளியிடுவதையும், சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத மொழிகளை பயன்படுத்துவதையும் கண்டறிந்துள்ளது. சில தொலைக்காட்சி நிறுவனங்களில், உக்ரைன்-ரஷ்யா இடையேயான விவகாரம் மற்றும் டெல்லி வடமேற்கு பகுதியில் நிகழ்ந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விவாத நிகழ்ச்சி நெறிமுறை கோட்பாட்டை மீறி உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
வன்முறை சம்பவம் காட்சிகளை ஒளிபரப்பு அதன்மூலம் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படும். இதுபோன்ற தேவையற்ற விவாத நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது..