இந்தியாவில் உள்ள ஒரு பள்ளியில் முதன் முறையாக ரோபோட் ஆசிரியர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவது போன்று ரோபோட்களும் ஆசிரியர் பணியை செய்து வருவது வியக்கத்தக்க ஒன்றாகும். இந்தியாவில் உள்ள கர்நாடகா பெங்களூருவில் இருக்கும் இந்துஸ் இன்டர்நேஷனல்ஸ் பள்ளியில் முதன்முறையாக குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதற்காக ரோபோட் ஆசிரியர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோட் ஆசிரியரின் பெயர் Eagle 2.0 ஆகும். இந்த ரோபோட் ஆசிரியர் physics, chemistry, biology, history, geology போன்ற பாடங்களை நடத்துகிறது. இந்தப் பள்ளியின் சி.இ.ஓ அர்ஜுன் ராய் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ரோபோட்கள் கூகுள் போன்று பாடங்களை சொல்லிக் கொடுக்கும் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் கூகுள் கற்பிக்காத பாடங்களை ஆசிரியர்கள் நடத்துவார்கள். இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் கூகுள் மூலமாக தங்களுக்கு தேவையான தகவல்களை தெரிந்து கொள்கிறார்கள். இதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு ஆசிரியர்களை விட ரோபோட் ஆசிரியர் உடனடியாக பதில் அளிப்பதால் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படிப்பில் கவனம் செலுத்துகின்றனர். இந்த ரோபாட் ஆசிரியர் 17 நபர்களின் 2 வருட உழைப்பிற்கு பிறகு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆசிரியர் ரோபோட்டை விக்னேஷ் ராவ் என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த ரோபோட் ஆசிரியரின் அனைத்து உறுப்புகளும் 3D பிரின்ட் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரோபோட்டில் உள்ள mechatronics complete ICT components ஆகும். அதன்பிறகு ரோபோட்டின் அனைத்து உறுப்புகளும் செயல்படுவதற்காக மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோட் டீச்சர் ஆசிரியர்களின் பணியை சுலபமாக்கி இருப்பினும், ஒரு ஆசிரியர் இல்லாமல் இந்த ரோபோட் ஆசிரியரால் பாடம் நடத்த முடியாது என்பதே உண்மை.