• Wed. Feb 19th, 2025

போஸ்ட்மேன் வேலையை சரியா செய்தால் போதும்- ஆளுநரை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

ByA.Tamilselvan

Apr 26, 2022

ஆளுநர் போஸ்ட்மேன் வேலையைசரியா செய்தால்மட்டும் போதும் என தமிழக முதல்வர் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.
ஊட்டியில் பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் ஆளுநர் மாநாடு நடத்தி வருகிறார். மாநாடு நடக்கும் அதே நேரத்தில்தான் தமிழ்நாடு அரசு ஆளுநர் பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை பறிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது\
சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நீட் விவகாரம், தேசிய கல்விக்கொள்கை, ஆளுநர் அதிகாரம், ஒன்றிய – மாநில அரசுகளின் உறவு உள்ளிட்ட பல விஷயங்களை அடிப்படையாக வைத்து இந்த கூட்டம் நடைபெற்றது.
இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
, தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்க.. மக்களின் படிப்பை தடுக்க போடப்பட்ட சதித்திட்டம்தான் நீட். மாநில உரிமைகளை பறிப்பதற்காகவே நீட், புதிய கல்விக்கொள்கை போன்றவற்றை கொண்டு வருகிறார்கள். மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசை ஆளுநர் மதிக்காமல் செயல்படுகிறார். மக்கள் தேர்வு செய்யப்பட்ட அரசு நிறைவேற்றிய ஒரு மாசோதாவை ஒரு நியமன ஆளுநர் திருப்பி இருக்கிறார் நாம் மீண்டும் மசோதாவை நிறைவேற்றி அனுப்பி இருக்கிறோம். ஆளுநர் அதிகாரம் இதை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதே சரியானதாக இருக்கும். ஆனால் அவர் அதை செய்யவில்லை.
இதுதான் மக்களாட்சியா? மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்தால் அதை நியமன பதவியில் இருக்கும் ஒருவர் தடுக்கிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை விட.. மக்களை விட ஆளுநர் அதிக அதிகாரம் கொண்டவர் என்று நினைக்கிறாரா? சட்ட முன் வடிவு நீட் சட்ட முன் வடிவிற்கு ஆளுநர் ஒன்றும் ஒப்புதல் வழங்க தேவையில்லை. அதற்கான அதிகாரமும் அவருக்கு இல்லை. நாங்கள் சட்டம் இயற்றிவிட்டோம். அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புங்கள் என்றுதான் கூறுகிறோம். போஸ்ட்மேன் வேலையை ஆளுநர் சரியாக பார்க்க வேண்டும் என்று ஆசிரியர் கீ வீரமணி கூறினார். அந்த போஸ்ட்மேன் வேலையை கூட ஆளுநர் சரியாக செய்யாமல் இருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகு அல்ல. நேற்று காலைதான் சட்டமன்றத்தில் ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில்தான் நேற்று மாலையே ஆளுநர் ரவியை கடுமையாக விமர்சித்து முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.