உத்தரப்பிரதேசத்தில் ஃபிரோசாபாத் நகரில் மர்ம காய்ச்சல் பரவி வருகின்றது. இந்த காய்ச்சலின் அறிகுறியும், டெங்கு காய்ச்சலின் அறிகுறியும் ஒன்றாக இருப்பதாக சுகாதாரதுறை தெரிவித்தள்ளது.
இந்த காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், இந்த காய்ச்சலுக்கும், கொரோனாவிற்கும் சம்பந்தமில்லை என்று தெரியவந்துள்ளது. பரவி வரும் மர்ம காய்ச்சல் காரணமாக 60ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகளை அதிகம் தாக்குவதால் சுகாதார நிபுணர் குழுவை அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. ஒருபுறம் மக்கள் பீதியில் இருக்கும் நிலையில், காய்ச்சல் ஆக்ரா, மெயின்புரி உட்பட பல பகுதிகளில் தீயாய் பரவி வருகின்றன. இதனால் ஃபிரோசாபாத்தில் உள்ள பள்ளிகள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் – சுகாதாரத்துறை எச்சரிக்கை
