• Mon. Apr 28th, 2025

கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்..,

ByKalamegam Viswanathan

Apr 10, 2025

சமையல் எரிவாயு (கேஸ்) விலை உயர்வை கண்டத்து மதுரை தெற்கு மவட்ட மகளிரணி சார்பில் கண்டன ஆர்பாட்டம் திருநகர் யூனியன் அலுவலகம் அருகே நடைபெற்றது.

100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கேஸ் விலை உயர்வை கண்டித்து கேஸ் சிலிண்டருக்கு மாலையணிவித்து மத்திய அரசிற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் ஆலோசனையின் பெயரில் கேஸ் விலை உயர்வை கண்டித்து மகளிரணி மாவட்ட செயலாளர் கிருத்திகா தங்க பாண்டியன் தலைமையில் திருநகரில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்பாட்டத்திற்கு மாவட்ட மகளிரணி செயலாளார் கிருத்திகா தங்கப்பாண்டியன் தலைமை தாங்கினார். திருப்பரங்குன்றம் பகுதி செயாளர் உசிலை சிவா முன்னிலை வகித்தார். திருப்பரங்குன்றம் ஒன்றிய செலாளர் பெரியசாமி, தங்கப்பாண்டியன் வரவேற்புரை கூறினார். மாவட்ட மகளிரணி து. அமைப்பாளர் ரதி, மற்றும் நிர்வாகிகள் பிரமிளா சாந்தி சியாமளாதேவி, இந்திரா, வள்ளி, மயில் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் கலந்து கொண்டு கேஸ் கட்டண உயர்விற்கு எதிராகவும். கட்டண உயர்வை திரும்ப பெற கோரி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

கேஸ் சிலிண்டருக்கு மாலையணிவித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது பொது மக்களை கவர்ந்தது.