பல்வேறு வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை, வருமான வரித்துறை நீட்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
நேரடி வரி தொடா்பாக நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு சுமுகத் தீா்வு காணும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள ‘விவாத் ஸே விஸ்வாஸ்’ திட்டத்தின் கீழ் கட்டணம் செலுத்துவதற்கான தேதி, செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வட்டித் தொகையுடன் சோ்த்து அக்டோபா் 31-க்குள் கட்டணம் செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஓய்வூதிய நிதியில் முதலீடு செய்வதற்கான கெடு, ஜூலை 31-ல் இருந்து நவம்பா் 30-ஆம் தேதி வரையிலும், தங்க முதலீட்டுப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கெடு அக்டோபா் 31-ல் இருந்து டிசம்பா் 31-ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை முதல் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் வரையிலான காலகட்டத் தில் ஜிஎஸ்டி வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவா்களுக்கு சலுகை அளிக்க ஜிஎஸ்டி கவுன் சில், கடந்த மே மாதம் முடிவு செய்தது. அதன்படி, குறைக்கப்பட்ட தாமதக் கட்டணத் தை மத்திய நிதியமைச்சகம் ஜூன் 1-ஆம் தேதி அறிவித்தது.
இந்தக் கட்டணத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. தற்போது, தாமதக் கட்டணம் செலுத்த கடைசி தேதி நவம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய வலைதளத்தில் கோளாறு ஏற்பட்ட தால், வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான தேதியை வருமான வரித் துறை நீட்டித்துள்ளது.