• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட விசிக நிர்வாகி;கம்பி எண்ண வைத்த காவல்துறை

By

Aug 30, 2021

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிகோட்டை மறியல் பகுதியை சேர்ந்தவர் அறிவுடைய நம்பி . இவர் தஞ்சை மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் தொகுதி செயலாராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ள நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூறி கடலூரை சேர்ந்த (28) பெண்ணுடன் கடந்த மார்ச் மாதம் திருமணம் நிச்சயம் செய்ததாக தெரியப்படுகிறது .

இந்நிலையில் ,கடந்த மே மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், அறிவுடை நம்பி பல பெண்களுடன் தொடர்பு இருந்ததை அறிந்தமணப்பெண் உடனடியாக திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நபர் அப்பெண்ணிடன் எடுத்து கொண்ட புகைபடத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக வளைதளங்களில் பதிவிட்டு அப்பெண்ணிற்க்கு கொலை மிரட்டல் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்

இதனால் பாதிக்கப்பட்ட கடலூரை சேர்ந்த பெண் கடந்த ஜூலை மாதம் போலீஸில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடிவந்த நிலையில் , இரண்டு மாதமாக போலீஸாரிடம் சிக்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்ரியா உத்தரவின் பேரில்,விசாரனையை தீவிர படுத்தினர். சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவானி அவரை கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.