• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

ஊழல் செய்த முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை..!

ByA.Tamilselvan

Sep 23, 2022

சீனாவில், 58 கோடி ரூபாய் ஊழல் செய்த முன்னாள் சட்ட அமைச்சருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அரசியல்வாதிகள் ஊழல் செய்வது வாடியான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் சீனாவில் அது மரணதண்டனை விதிக்கும் அளவுக்கு குற்றமாகும்.
சீனாவில், அதிபர் ஜின்பிங், ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய அங்கம் வகித்தவர் பூ செங்குவா. இவர், பெய்ஜிங் மாநகராட்சியின் பொது பாதுகாப்பு அதிகாரி, பொதுப் பாதுகாப்பு துணை அமைச்சர் மற்றும் சட்டத் துறை அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார். பூ செங்குவா தனது பதவிக்காலத்தில் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு 58 கோடி ரூபாய் வரையில் ஊழல் செய்ததாகவும், தனது குடும்பத்தினருக்கு சலுகைகள் செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்த வழக்கு ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்கன் நகர நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், செங்குவாவுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.