• Sat. Apr 20th, 2024

பொறியியல் தரவரிசை பட்டியல் அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்

ByA.Tamilselvan

Aug 16, 2022

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், தரவரிசைப் பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.
தமிழகத்திலுள்ள 434 பொறியியல் கல்லூரிகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலை, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்
தரவரிசைப் பட்டியலை http://tneaonline.org என்ற இணையதளத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் பேசும் போது …. இந்த ஆண்டு 1,48,811 இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் உள்ளன. 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 10968 இடங்கள் உள்ளன. தொழிற்கல்வி மாணவர்களுக்கு 2 சதவீத இடங்கள் என்ற அடிப்படையில் 175 இடங்கள் உள்ளன. தரவரிசையில் முதல் 10 இடங்கள் பிடித்த அனைவரும் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மாற்றுத் திறனாளிகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு உட்பட சிறப்புபிரிவுக்கான கலந்தாய்வு வரும் 20 முதல் நடைபெற உள்ளது. அதன்பிறகு, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 25-ம்தேதி முதல் பல சுற்றுகளாக நடக்க உள்ளது. 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *