தங்கள் திருமண நிச்சயதார்த்தை ஆந்திராவை சேர்ந்த ஜோடி நடுக்கடலில் நடத்திய சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.
சென்னை அருகே கடலுக்குள் 50 அடி ஆழத்தில் திருமண நிச்சயதார்த்தம் செய்து பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆந்திராவை சேர்ந்த சுரேஷ் ,ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த கீர்த்தனாவை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இதையடுத்து கடலில் பிளாஸ்டிக் சேர்வதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வெட்டுவாங்கேணி கடல் பகுதியில் 50 ஆடி ஆழத்தில் நிச்சயதார்த்தம் நடத்தினர் இந்த ஜோடிகள்.