
தமிழ் திரையுலகில் முக்கிய கதநாயாகனாக ஜொலிக்கம் அஜித் குறித்து பல வீடியோக்கள் அடிக்கடி ட்ரெண்ட் ஆகி வரும். அப்படி அவர் சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் இருக்கும் இடத்திற்கு செல்ல பேருந்தில் பயணித்துள்ள வீடியோ வைரலாகியுள்ளது.
மற்ற நடிகர்களைப் போல் இல்லாமல் மீடியா வெளிச்சத்தில் இருந்து விலகியே இருக்க விரும்புபவர் அஜித். இதன் காரணமாகவே இவர் எந்த ஒரு சோசியல் மீடியாவையும் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் இவர்மீது ரசிகர்கள் வைத்துள்ள அன்பு குறைவதே இல்லை.
சமீபகாலமாக நடிகர் அஜித் எங்கு சென்றாலும் அதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலாகி விடுகின்றன. அந்த வகையில் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏ.கே.61 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக விசாகப்பட்டினம் செல்ல இன்று காலை சென்னை விமான நிலையம் வந்திருந்தார் நடிகர் அஜித். விமான நிலையத்தில் இருந்து விமானம் இருக்கும் இடத்திற்கு செல்ல பயணிகள் அனைவரையும் பஸ் ஒன்றில் அழைத்து செல்வர். அப்படி இன்று காலை அஜித் சென்னை விமான நிலையத்தில் ஒரு பேருந்தில் மக்களோடு மக்களாக பயணித்துள்ளார். அந்த பேருந்தில் கூட்டமாக இருந்தபோதிலும் அதில் மிகவும் எளிமையாக நின்றபடியே பயணித்துள்ளார் அஜித். அவர் பேருந்தில் நின்றபடி பயணித்தபோது எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
