அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான்மஸ்க் விலகியுள்ளார்.
உலகின் மிகப் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவராகவும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், மற்றும் எக்ஸ் சமூக வலைதளத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், கடந்த 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்தார். அவர் ட்ரம்பின் பிரசாரத்திற்கு நிதி உதவி வழங்கியதுடன், அவரது நிர்வாகத்தில் முக்கியப் பங்கு வகிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
அதன்படி, ட்ரம்ப் 2025 ஜனவரியில் அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்ற பிறகு, அரசின் செலவுகளைக் குறைப்பதற்காகவும், நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காகவும் “Department of Government Efficiency” (DOGE) என்ற புதிய துறையை உருவாக்கினார். இந்தத் துறையின் தலைவராக எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். இந்த பதவியை அவர் 130 நாட்கள் மட்டுமே ஏற்க ஒப்புக் கொண்டிருந்தார்.
இருப்பினும், எலான் மஸ்க் (DOGE) தலைவராக செயல்பட்ட போது, அரசு ஊழியர்கள் பலரை நீக்கியது, வெளிநாடுகளுக்கான நிதி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்காக விமர்சிக்கப்பட்டார். இந்த நிலையில், அமெரிக்க சிறப்பு அரசு பணியாளராக தனது பணிக்காலம் முடிவடைந்ததாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அரசின் வீண் செலவுகளை குறைப்பதே னுழுபுநு-ன் முக்கிய பணியாக இருந்ததாகவும், இந்த வாய்ப்பை வழங்கிய டிரம்புக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தள பதிவில், ”சிறப்பு அரசாங்க ஊழியர் என்ற எனது பணிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. தேவையற்ற செலவினங்களை குறைக்கும் பணியில் ஈடுபட வாய்ப்பளித்த ட்ரம்பிற்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான்மஸ்க் விலகல்
