தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி யானைகள் நடமாட்டம் எல்லா நேரங்களில் காணப்படும். வண்டிகள் அதிகம் அப்குதியில் சென்று வருவதால், வானக ஓட்டிகளும் யானைகளுக்கு தொந்தரவு தராத வகையில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் அருகே தமிழக கர்நாடக எல்லையில், சாலைக்கு வந்த இரண்டு காட்டு யானைகள் தனது குட்டியுடன் வாகனங்களை வழிமறித்து நின்றபடி ஜாலியாக தும்பிக்கையால் சண்டையிட்டபடி சுமார் அரை மணி நேரம் சாலையில் விளையாடின. இதை வாகன ஓட்டிகள் கண்டு ரசித்தனர். சிலர் வீடியோக்களும், சிலர் புகைப்படங்களும் எடுத்து மகிழ்ந்தனர்.
யானைகள் பொதுவாக இந்த மாதிரியான சூழலில் அமைதியாக சாலையை கடந்து செல்லும், இந்த மாதிரியான நிகழ்வுகள் எப்போதாவதுதான் நடைபெறும் என இதை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.