• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

அ தி மு க சார்பில் விருதுநகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம்..,

சட்டமன்ற தேர்தலில் அ தி மு க சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் வி ஜி கணேசன் இன்று மாலையில் அல்லம்பட்டி பகுதியில் வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார்.

பிரச்சராத்திற்கு வந்த வி ஜிகணேசன் அவர்களுக்கு ஒன்றிய செயலாளர் கே கே கண்ணன் ஆப்பிள் மாலை அணிவித்து கௌரவித்தார். நமது அரசியல் டுடே மேலாளர் மாரியப்பன் அவர்கள் கே டி ராஜேந்திர பாலாஜி எழுதிய சமூக நீதியை காத்த எடப்பாடியார் புத்தகம் வழங்கினார். வேட்பாளர் வி.ஜி. கணேசன் அவர்களுக்கு அந்த பகுதியை சார்ந்த பொதுமக்கள் திரளாக வந்து தங்களது ஆதரவினை தெரிவித்தனர். வி ஜி கணேசன் பேசும்போது புரட்சி தலைவி அம்மா அவர்கள் ஆசியுடன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் எனக்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்தால் கூரை குண்டு பஞ்சாயத்தை பேரூராட்சியாக ஆக்குவேன்.

ஆயிரம் குழந்தைகளுக்கு ஒன்று முதல் கல்லூரி படிப்பு வரை எனது சொந்த செலவில் படிக்க வைப்பேன் இதனை தேர்தல் வாக்குறுதியாக கூறினார்.