• Fri. Oct 2nd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா..,

Byமுகமதி

Oct 2, 2026

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மறைந்த தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள் விழா முன்னாள் மாவட்ட தலைவரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் சந்திரசேகரன் தலைமையில் மாநகரத் தலைவர்கள் மதன் கண்ணன், பாருக் ஜெய்லானி, மாவட்டத் துணைத் தலைவர்கள் வேங்கை அருணாசலம், எம் ஏ எம் தீன், தமிழ்ச்செல்வன், சிவக்குமார், இப்றாஹீம் பாபு, ஒன்றியத் தலைவர்கள் புதுக்கோட்டை சூர்யா பழனியப்பன், அன்னவாசல் சுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர் ராஜா முகமது, மாவட்டக்கலைப் பிரிவுத் தலைவர் மேப் வீரையா ஆகியோர் முன்னிலையில் புதுக்கோட்டை மாநகர் காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் கர்ம வீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் புதுக்கோட்டை காமராஜரபுரத்தில் காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருக் கட்டளை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெயபாலன், அன்னவாசல் செல்வராஜ், முகமது கனி, அடப்பன்வயல் எஸ் ஏ காதர் மைதீன், தாமரைச் செல்வன், திருக்குமரன், தினேஷ் குமார், முத்துவிஜயன், காந்தி நகர் ரா.திருக்குமரன் கல்யாணராமபுரம் அருள் முருகன், மகளிர் காங்கிரஸ் தலைவர் சிவந்தி உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ராஜ கோபாலபுரம் பெரியார் நகர் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் திருவுருவப் படத்திற்கும் காங்கிரஸ் கட்சியிர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.