• Tue. Dec 10th, 2024

எடப்பாடி பழனிச்சாமி மனதிற்குள் முதலமைச்சரின் செயல்பாடுகளை பாராட்டி கொண்டு இருக்கிறார் – கே.ஆர்.பெரியகருப்பன்

முதலமைச்சரின் செயல்பாடுகளை, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியில் விமர்சித்தாலும், மனதிற்குள் பாராட்டி கொண்டுதான் இருக்கிறார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் என கூறியுள்ளர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வருவாய்த் துறையின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்த போது, வரலாறு காணாத மழை பெய்தும், தமிழகத்தில், சிறிய அளவிலேயே மழை சேதம் ஏற்பட்டுள்ளது என்றும், இதற்கு காரணம் முதலமைச்சர் எடுத்த தீவிர நடவடிக்கையே என்றும் அமைச்சர் தெரிவித்தார். முதலமைச்சர் முன் களப்பணியாளராக மாறி, மழை பாதிப்பிற்குள்ளான பகுதிகளுக்கு நேரடியாக சென்று மக்கள் பணியாற்றி வருகிறார்.

முதலமைச்சரின் செயல்பாடுகளை, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியில் விமர்சித்தாலும், மனதிற்குள் பாராட்டி கொண்டுதான் இருக்கிறார் என்ற அமைச்சர், முதலமைச்சரின் சுறுசுறுப்பான களப்பணியை பார்த்து, தங்களது கொஞ்ச, நஞ்ச செல்வாக்கும் சரிந்துவிடுமோ என எதிர்க்கட்சிகள் அஞ்சுவதாகவும் தெரிவித்தார். கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் அந்தந்தப் பகுதி மருத்துவர்கள் குழுவால் கவனிக்கப்பட்டு நோய்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், போக்குவரத்து தடையால் நிலவிய உரத்தட்டுப்பாடும் போர்கால அடிப்படையில் முதலமைச்சரால் சீர் செய்யப்பட்டு, தட்டுப்பாடு சரி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.