உதயநிதி ஸ்டாலின் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு ஒருங்கிணைந்த உதயநிதி ஸ்டாலின் நற்பனிமன்றம் சார்பில் தொடர்ந்து பல்வேறு நிழகச்சிகள், நலத்திட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று அய்யாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு ரூ10,000 மதிப்புள்ள இருக்கைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மன்ற மாவட்ட தலைவர் ஈஸ்வரன், மாவட்ட செயலாளர் பேராசிரியர் செல்லத்துரை, தலைமை வகித்தினர் சிறப்பு விருந்தினராக தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான அழகுசுந்தரம், மாவட்ட கவுன்சிலர் கனிமொழி, செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இதில் மன்ற மாவட்ட துணை செயலாளர்கள் சங்கர், வீரா முத்துசாமி மாவட்ட துணை பொருளாளர் மதன், மன்ற நிர்வாகிகள் ASM மாரியப்பன், முருகன், பெட்டி C முருகையா, கணக்கா பிள்ளை வலசை ஊராட்சி செயலாளர் சிவனுப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.


