நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்திரப்பிரதேச மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் அடுத்த வருடம் 2022 நடக்கிறது.
தற்போது ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி பலத்த முயற்சி செய்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் உத்திரப் பிரதேச மாநில பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி பெண்களைக் குறிவைத்துக் களமிறங்கியுள்ளார்.

நேற்று (டிச. 8) பெண்களுக்கான (பிங்க் நிற) தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் சார்பில் அவர் லக்னோவில் வெளியிட்டார். அந்த நிகழ்வில் பேசிய பிரியங்கா காந்தி,
“பெண்களுக்கு அரசியலில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வரை இந்தியாவின் உண்மையான வளர்ச்சி கனவாகவே இருக்கும்.
இன்றைய நிலவரப்படி, லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் 14சதவிதத்துக்கும் குறைவான பெண் பிரதிநிதிகளே உள்ளனர். இதனால் வரும் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், அரசு பணியிடங்களில் பெண்களுக்கு 40சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்”என்று தெரிவித்தார்.