• Fri. Mar 29th, 2024

நேரு நினைவு கல்லூரியில் பூமியின் ஆரத்தை கணக்கிடும் செயல்பாடு

ByKalamegam Viswanathan

Apr 24, 2023

நேரு நினைவு கல்லூரியில் இயற்பியல் துறை மற்றும் என்.எம்.சி அஸ்ட்ரோ கிளப் ஆகியவை இணைந்து நிழலில்லா நாள் நிகழ்வு மூலம் பூமியின் ஆரத்தை அளக்கும் நிகழ்வு நடத்தியது
எரட்டோஸ்த்தனஸ் என்ற கிரேக்க அறிஞர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிழலில்லா நாளன்றுதான் பூமியின் விட்டத்தை அளந்து கூறினார். பொதுவாக ஒரு பொருளின் நிழலானது சூரியன் உச்சிக்கு செல்லச் செல்ல சிறிதாகிக்கொண்டே வரும் என நமக்கு தெரியும். சூரியன் நம் தலைக்கு நேர் மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும் அதாவது நிழல் காலுக்குக் கீழே இருக்கும். ஆனால், நடைமுறையில் தினமும் சூரியன் சரியாக தலைக்கு மேலே வருவதில்லை. ஆண்டிற்கு இரண்டுமுறை மட்டுமே ஒரு இடத்தின் தலைக்கு மேலே வரும். ஆக, ஒரு இடத்திலுள்ள ஒரு பொருளின் நிழலின் நீளம் ஆண்டிற்கு இருமுறை பூஜ்ஜியமாகின்றது, இல்லையா அந்த நாளையே நிழலில்லா நாள்'(Zero Shadow Day) என்கிறோம். இன்று 24.04.23 திங்கள்கிழமை சென்னையில் நிழல் இல்லாத தினம் ஆகும்.
மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார், தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சங்கம், அறிவியல் பலகை இணைந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பூமியின் ஆரத்தை அளக்கும் நிகழ்வு நடத்தியது.


நேரு நினைவு கல்லூரியில் இயற்பியல் துறை மற்றும் NMC அஸ்ட்ரோ கிளப் ஆகியவை இணைந்து நிழலில்லா நாள் நிகழ்வு மூலம் பூமியின் ஆரத்தை அளக்கும் நிகழ்வு நடத்தியது. கல்லூரி முதல்வர் முனைவர் அ.ரா பொன் பெரியசாமி தலைமை வகித்தார். இயற்பியல் துறை தலைவர் முனைவர் வெங்கடேசன், இயற்பியல் துறை பேராசிரியர்கள் பாலமுருகன், கபிலன், ரமேஷ், ரமேஷ் பாபு, முருகானந்தம் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் மதியம் 11:55 மணி முதல் 12.35 மணி வரை சோதனை செய்து சோதனை பூமியின் ஆரம் மற்றும் சுற்றளவு அளக்கப்பட்டது. சென்னைக்கும் புத்தனாம்பட்டிக்கும் உள்ள ஆர தொலைவை வைத்தும் குச்சியின் நிழலை வைத்தும் பூமியின் ஆரம் மற்றும் சுற்றளவு கண்டறியப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *