• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வெளிநாடு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

ByA.Tamilselvan

Apr 24, 2023

முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 20-ம் தேதிக்கு பிறகு லண்டன் செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பயணம் ஒரு வார கால பயணமாக இருக்கும் எனவும், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் , தொழில் முதலீடுகளை ஈப்பது தொடர்பாக தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை அவர் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மே 2-ம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.