• Tue. May 12th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

மயான வசதி கேட்டு இறந்த உடலை சாலையில் வைத்து கிராம மக்கள் போராட்டம்..,

ByPuthar Pandian P

May 12, 2026

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள ஐம்பதுரைக் கோட்டை ஊராட்சியில் உள்ள காமலாபுரம் காலணி பகுதியில் 100க்கு மேற்பட்ட வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு மயான வசதி இல்லாமல் நீண்ட காலமாக சாலை ஓரத்தில் மயானமாக பயன் படுத்தி வந்தனர். காமலபுரம் பிரிவு முதல் செம்பட்டி வரை சாலை அகலப்படுத்தப்பட்டது.

அப்போது இப்பகுதி மக்கள் பயன் படுத்தி வந்த மயானம் இடத்தை மூடி விட்டு, சாலை அமைத்தனர். இதனால் இப்பகுதி மக்களுக்கு மயானம் இடம் இல்லாமல் இறந்தவர் உடலை திண்டுக்கல் மின் மயானத்திற்கு எடுத்து சென்று வந்தனர்
மயான வசதி ஏற்படுத்தி தர பல முறை கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் காமலாபுரம் காலணியைச் சேர்ந்த முருகன் ( வயது 65) என்பவர் கூலி தொழிலாளி ஆவார். நேற்று முன்தினம் முருகன் என்பவர் இறந்துவிட்டார்
இவர் உடலை அடக்கம் செய்ய மயான இடம் கேட்டு பொதுமக்கள் தமிழ் புலி அமைப்பினர், ஆதித்தமிழ் பேரவை அமைப்பினர் இறந்த முருகன் உடலை கொடைரோடு – செம்பட்டி சாலையில் போராட்டம் நடத்தினர்.

அப்போது தகவல் அறிந்து வந்த அம்மைய நாயக்கனூ போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், ஒருத்தட்டு வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதரன், ஜம்புதுரைக் கோட்டை கிராம நிர்வாக அலுவலர் கலா மற்றும் அலுவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் விரைவில் மயான இடம் தேர்வு செய்து தருகிறோம் என உறுதி அளித்தனர். அதன் பின்னர் பேராட்டம் கைவிடப்பட்டது. தற்போது சாலை ஓரத்திலேயே இறந்த முருகன் உடல் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது இதனால் கொடைரோடு – செம்பட்டி ஒட்டன்சத்திரம் பழனி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

மதுரை திண்டுக்கல் செல்லும் நான்கு வழிச்சாலை மாற்று பாதையாக வாகனத்தை திருப்பி அனுப்பினர் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.