• Wed. Dec 11th, 2024

டாக்டர் சரவணன் பா.ஜ.க.வில் இருந்து நீக்கம்- அண்ணாமலை

ByA.Tamilselvan

Aug 14, 2022

மதுரை நகர், மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் பாஜகவிலிருந்து நீக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மதுரை நகர், மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார். எனவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை சந்தித்து விட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சரவணன், பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்த நிலையில், இன்று காலை கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.