எடப்பாடியார் மீண்டும் தமிழக முதலமைச்சராக அமர வேண்டி சிவகாசி பள்ளிவாசலில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் சிறப்பு தொழுகை நடத்தினா்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தனது 68 வயதை கடந்துள்ள நிலையில் அவர் மீண்டும் தமிழக முதலமைச்சராக வரவேண்டி தமிழகம் முழுவதிலும் 68 பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்று வருகின்றது.
சிவகாசியில் முத்துல்லாஷா தர்ஹாவில் நடைபெற்ற ஜியாரத் எனும் சிறப்பு தொழுகையில் அதிமுக அவைத்தலைவரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன்உசேன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், சிவகாசி முன்னாள் நகர செயலாளர் அசன்பதூருதீன், மாநகராட்சி மண்டல செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணகுமார், கருப்பசாமிபாண்டியன், ஷாம் (எ)ராஜஅபினேஸ்வரன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குறிஞ்சி முருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன். தேசிய லீக் மாநிலச் செயலாளர் செய்யது ஜஹாங்கீர், சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.