• Sat. Apr 20th, 2024

எடப்பாடி பழனிச்சாமி காலில் “எம்.ஜி.ஆர்” விழுவதா?

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் பிரச்சாரத்தில் எம்ஜிஆர் வேடமிட்ட ஒருவர் அவரது காலில் விழுந்ததற்கு முன்னாள் அதிமுக எம்பி கே சி பழனிச்சாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்டவை கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவை தனித்து போட்டியிடுகிறது. அந்தந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை மாவட்டத்தில் கோ புதூரில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது எம்ஜிஆர் வேடமிட்டு அதிமுக பிரமுகர் ஒருவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலகலப்பூட்டினார். அப்போது எடப்பாடி பழனிச்சாமியிடம் பாராட்டுகளை பெற மேடைக்கு சென்றார்.

இதையடுத்து அவர் எடப்பாடி பழனிச்சாமியின் கால்களில் விழுந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர் வேடமிட்ட ஒருவர் எடப்பாடி பழனிச்சாமி காலில் விழுந்தது சரியா என அதிமுக நிர்வாகிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு முன்னாள் அதிமுக எம்பி கே சி பழனிச்சாமியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புகைப்படத்துடன் தனது ட்விட்டர், பேஸ்புக்கில் வெளியிட்ட அவர் கூறுகையில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்! புரட்சித் தலைவர் பாரதரத்னா #எம்ஜிஆர் அவர்களின் வேடமிட்டவரை எடப்பாடி தன் காலில் விழ வைத்தது சரியா? இன்றளவும் அதிமுகவின் அடிநாதமாக விளங்கிக் கொண்டிருப்பவர்.

அவரைப் போலவே வேடமிட்டவரை எடப்பாடி தன் காலில் விழுவதை கண்டு ரசிப்பது கட்சிக்கு இழைக்கும் மிகப் பெரிய துரோகம்! என தனது கண்டனத்தை கேசி பழனிச்சாமி பதிவு செய்துள்ளார். அதிமுக நிர்வாகிகள் பலரும் இந்த செயலுக்கு கண்டனம் செய்துள்ளார்
மேலும் இந்த நிகழ்ச்சி மதுரையில் நடந்தது தான் மேலும் அவலச் செயல் என்று அதிமுகவினர் கூறுகின்றனர். இது குறித்து பேசிய கட்சி நிர்வாகி ஒருவர். மதுரை தான் அதிமுகவின் அரசியலுக்கு பெரும் பங்களிப்பை ஏற்படுத்தியது.முன்னொரு காலத்தில் மதுரை எம் ஜி ஆரின் கோட்டையாக திகழ்ந்தது. ஆனால் அதன் பிறகு கோட்டை இருந்த தடையம் இருந்தது. ஆனால் இந்த நிகழ்வுக்கு பிறகு கோட்டையாக ஒரு காலத்தில் இருந்ததாக கூறப்பட்டது என்று வரலாறு மாறும்.
மேடையிலிருந்த முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ , ஆர் பி உதயகுமார் , எம் எல் ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் இந்த செயலை தடுக்காமல், வேடிக்கை பார்த்து கைகொட்டி சிரித்துள்ளனர். இதனை தான் அதிமுகவினர் விரும்புகின்றனரா ? இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமி விரும்புகிறாரா.
அண்ணா நாமம் வாழ்க புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் நாமம் வாழ்க என்று வாய் பேச்சில் கூறிவிட்டு எம் ஜி ஆருக்கு பட்டை நாமத்தை அழகாக அதிமுக தலைமை போட்டுக்கொண்டிருக்கிறது. தீவிர எம் ஜி ஆர் ரசிகர் அதன் வெளிப்பாடாக எம்ஜிஆர் , ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்த இதே முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தான் மேடையில் அமைதியாக இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
இந்த செயல் அதிமுகவினர் மட்டுமின்றி பொது மக்களிடத்தும் அதிமுகவிற்கான செல்வாக்கை கேள்விக்குறியாக்கி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *