• Thu. Mar 28th, 2024

திமுகவில் இருந்து பாஜகவிற்கு தாவிய குக செல்வம் மீண்டும் திமுகவில் இணைந்தார்.

திமுக மீது பாய்ந்த கு.க.செல்வம் எனும் கிடா

தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்களுக்கு என்றும் பஞ்சம் கிடையாது. அந்த வகையில் திராவிட கட்சியில் இருந்த பலர் பாஜகவில் இணைந்தனர். ஆனாலும் முகஸ்டாலினுக்கு நெருக்கமாக கருதப்பட்ட குக செல்வம் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து முக ஸ்டாலினை விமர்சித்து வந்தது, அதனை தொடர்ந்து திமுக அவரை அதிரடியாக நீக்கியது.

பாஜகவில் எந்த வித பொறுப்பும் வழங்காத நிலையில் மீண்டும் தாய் கழகத்தை நோக்கி பாசத்துடன் ஓடி வந்துள்ளார். இந்த நிலையில் திமுகவில் எப்பொழுதும் கட்சியை விட்டு ஒருவர் நீங்கினால் ஒலிக்கும் பாடல் வளர்த்த கிடா மார்பில் பாய்ந்ததடா என்ற நாகூர் ஹனிபாவின் பாடல் தான்.

19.4.1961-ல் கட்சியிலிருந்து ஈ.வெ.கி. சம்பத் வெளியேறி ‘தமிழ்த் தேசியக் கட்சி’-யை உருவாக்கினார். தி.மு.க.வில் ஏற்பட்ட முதல் பிளவு இது. கண்ணதாசனும் திமுகவிலிருந்து வெளியேறியிருந்த காலம் அது. அவர்கள் இருவரையும் சாடுவதுபோல் ஒரு பாடல் பாட வேண்டும் என்ற ஆவல் நாகூர் ஹனிபாவின் எண்ணத்தில் உதித்தது. ‘கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவான்’ என்பது போல மேடை நாடகங்களுக்கு கதை, வசனம், பாடல்கள் எழுதி வந்த உள்ளுர்க் கவிஞர் நாகூர் சலீமை அணுகி தன் எண்ணத்தை வெளியிட்டார்.
“வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா” என்ற சரணத்தைக் கேட்டதுமே பரவசப்பட்டுப் போனார் நாகூர் ஹனிபா. அவர் நினைத்தைப் போலவே அப்பாடல் பெருமளவில் வரவேற்பை பெற்றது. இடம், பொருள், ஏவலுக்கு ஏற்றார்போல் அப்பாடல் பட்டி தொட்டிகளெங்கும் ஒலித்தது. அதன் பின்னர் எம்.ஜி.ஆர் அவர்கள் திமுகவை விட்டு வெளியேறிய போதும், வைகோ அவர்கள் கலைஞரை விட்டு பிரிந்தபோதும் இதே பாடல்தான் மூலை முடுக்குகள் எங்கும் ஒலித்தது. அதன் பின்னர் மாறன் சகோதரர்கள் கலைஞர் அவர்களை பகைத்துக்கொண்டு கிளம்பியபோது “கிளிக்கு ரெக்கை மொளைச்சிடுச்சு, ஆத்தை விட்டே பறந்து போயிடுச்சு” என்ற பாடல் ஒலிக்கவில்லை.

அச்சமயத்திலும் நாகூர் ஹனிபாவின் “வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா” என்ற பாடல்தான் கைகொடுத்தது. தற்போது வைகோவின் கட்சியிலிருந்து நாஞ்சில் சம்பத் வெளியேறி விட்டார். “பட்ட பாடுகளும் பதிந்த சுவடுகளும்” என்ற தொடரை குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதத் துவங்கி விட்டார்.

முன்னொரு காலத்தில் தி.மு.க.வில்இருந்து கு க செல்வம் விலகிய போதும் , பேராசிரியர் அன்பழகனின் பேரன் வெற்றியழகன் பாஜகவில் இணைந்த போதும் “வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா” என்ற பாடல் ஒலிப்பதை நாம் கேட்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *