• Sat. Apr 20th, 2024

அரைஸ் அண்ட் ஷைன் அறக்கட்டளை நிறுவனத் தலைவருக்கு டாக்டர் பட்டம்

உதகை ஜெம் பார்க் நட்சத்திர ஹோட்டலில் அரைஸ் அண்ட் ஷைன் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஜாம்பவான் ஜெரால்டுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள அரைஸ் அண்ட் ஷைன் அறக்கட்டளை 15-2- 1999 துவங்கப்பட்டு எண்ணற்ற சேவைகளை இன்று வரை பணிகளை செய்து கொண்டு வருகிறது. ஒரு நபர் தனது சொந்த வாழ்க்கையை விட்டு வெளியேறி மற்றவர்களுக்கு நன்மை பயக்கும் ஒன்றைச் செய்ய வேண்டும்
சமூக சேவையானது தனிநபர்களுக்கு சாதனை உணர்வை வழங்குகிறது மற்றும் நேரத்தையும் பணத்தையும் தன்னார்வமாக வழங்குவதன் மூலம் பல்வேறு துறைகளில் அவர்களின் அறிவை விரிவுபடுத்துகிறது. வளர்ச்சியை விரும்பும் ஒரு நபர் சமூக சேவையின் முக்கியத்துவத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் போல
ஜாம்பவான் ஜெரால்ட் செய்யும் பணி பெரும் மகத்தான சேவையாகவே கருதப்படுகிறது வயது முதிர்ந்த பெரியவருக்கு உதவுவது முதல் பார்வையற்றவர்களுக்கு பரிச்சை எழுதுவது வரை துன்பத்தில் யாராவது பாதிக்கப்படும் போது நம்மால் ஆன உதவியை செய்து துன்பத்தை போக்குவதை சேவை மனிதாபிமானத்துடன் செய்யப்படும் எல்லா காரியங்களும் சமூக சேவை ஆகும்.

மேலும் இதில் அன்று முதல் இன்று வரை ரைஸ் அண்ட் ஷைன் அறக்கட்டளையின் மூலம் குழந்தை காப்பகம் மருத்துவ முகாம் ரத்த தான முகாம் முதியோர்களுக்கு உதவி செய்தல் கணவனால்கைவிடப்பட்டோருக்கு சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்துதல் போன்ற எண்ணற்ற சேவைகளை மேற்கொண்டு வருகிறார் இதனை ஊக்குவிக்கும் வகையில் எண்ணற்ற கவுரவ பட்டங்களை விருதுகளையும் பெற்றவர் அவர்.அவருக்கு டாக்டர் ஜாம்பவான் ஜெரால்ட் என டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது பெரும் மகிழ்ச்சி என பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *