• Thu. Apr 25th, 2024

குளோபல் ஹியூமன் பீஸ் யுனிவர்சிட்டி சார்பில் முனைவர் பட்டம் வழங்கும் விழா

குளோபல் ஹியூமன் பீஸ் யுனிவர்சிட்டி சார்பில் பல்வேறு சமூக சேவை செய்து வருபவர்களை கௌரவிக்கும் வகையில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது…
மலை பிரதேசமான நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தமிழ்நாடு கர்நாடகா கேரளா ஆந்திரா தெலுங்கானா டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல்வேறு சமூக சேவைகள் செய்து வருபவர்களை கௌரவிக்கும் வகையில் குளோபல் ஹியூமன் பீஸ் யுனிவர்சிட்டி சார்பில் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இதில் கடந்த கொரோனா தொற்று நோய் காரணமாக ஊரடங்கு நேரத்தில் வேலை எளிய மக்களுக்கு அரிசி பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய உதகை திமுக நகர கழக செயலாளரும், பதினான்காவது வார்டு உறுப்பினருமான எஸ் ஜார்ஜ் மற்றும் மேலூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் மன தத்துவ மற்றும் உளவியல் நிபுணர் நாகராஜ் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தனர்.
இதேபோல் கொரோனா காலகட்டத்தில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தது உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை செய்த தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் அப்துல் சமது தேவரத்தினர்கள் சேவா ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட சமூக சேவகர்களுக்கு டாக்டர் பட்டம் மற்றும் சேவா ரத்னா விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *