நடிகர் ரஜினிகாந்த் நலமாக இருப்பதாக அவரது ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி அமெரிக்கா சென்று தனது உடல்நிலை குறித்த பரிசோதனைகளை செய்து வருவது வழக்கம். ஆனால், இந்த முறை அவர் சென்னை உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்துக்கு ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ பரிசோதனை செய்வது வழக்கம்தான் என்று கூறிய லதா ரஜினிகாந்த், முழு உடல் பரிசோதனைக்காக ஒருநாள் மட்டும் ரஜினிகாந்த் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “தலைவர் நலமாக இருக்கின்றார், வதந்திகளை நம்பவேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி சென்று விருது வாங்கிவந்த கையாடு ரஜினி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தான் அவரது ரசிகர்களிடம் கலக்கத்தை ஏற்ப்படுத்தியது.