• Sat. Feb 15th, 2025

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு பிப்ரவரி 3-ல் திமுக அமைதிப் பேரணி

ByIyamadurai

Jan 31, 2025

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி வரும் பிப்ரவரி 3-ம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் பிப்.3-ம் தேதி வருகிறது. அன்றைய தினம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் காலை 7 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.

முன்னதாக திமுகவின் இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், அனைத்து அணியினரும் பங்கேற்கும் அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும் என சென்னை மாவட்ட திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.