• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

திமுக அமைச்சருக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி..!

ByA.Tamilselvan

Dec 1, 2022

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக இருப்பவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன். இவர், நேற்று இரவு வீட்டில் இருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரை, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.