ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் உள்ள ஸ்ரீ ராஜகணபதி கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. அதனை ஒட்டி ஈரோடு மாநகராட்சி வளாகத்தின் உள் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே திராவிட விடுதலைக் கழகத்தை சேர்ந்த கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தின் உள்ளே சட்டவிரோதமாக போடப்பட்ட யாகசாலை அகற்றப்பட வேண்டும் மதசார்பின்மையை கடைபிடிக்கும் திராவிட மாடல் அரசுக்கு இது களங்கப்படுத்துவதாக உள்ளது என்று கோசங்கள் எழுப்பினர்.அதன் பின் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த டவுன் டிஎஸ்பி எஸ்.ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 நபர்களை கைது செய்து நகராட்சி மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.