• Mon. Apr 21st, 2025

நிதியை தமிழகத்திற்கு வழங்காததை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்..,

ByM.JEEVANANTHAM

Mar 29, 2025

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்துள்ளது மங்கைநல்லூர். இங்கு 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய நிதி 4034 கோடியை தமிழகத்திற்கு வழங்காததை கண்டித்து திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் தலைமையில் நடைபெற்றது. தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் குத்தாலம் க அன்பழகன் ex-M.L.A கண்டன உரை ஆற்றினார்.