தென்காசி மாவட்ட ஊராட்சிக் கூட்டம் தலைவர் தமிழ்செல்வி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் ஒன்பதாவது வார்டு உறுப்பினர் இரா சாக்ரடீஸ் அவரது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மழையால் சேதமடைந்த கிராம ஒன்றிய சாலைகளை சீரமைத்துதரும்படியும், கீழப்பாவூர் ஒன்றிய தெற்குப் பகுதியில் நிரம்பாமல் இருக்கக்கூடிய குளங்கள் கைக்கொண்டார் புதுக்குளம் ஆவுடையானுர் கொண்டலூர் போன்ற குளங்கள் நிரம்பும் வகையில் ஜம்புநதி மேல்மட்ட கால்வாயை நிறைவேற்றி தரும்படியும், குற்றாலம் இந்திய அளவில் சிறந்த சுற்றுலா மையமாக உருவாவதற்கு நடவடிக்கை எடுக்கும் படியும், தென்காசி மாவட்டத்தை சிறந்த விவசாய பொருட்கள் உற்பத்தி செய்யக்கூடிய மாவட்டமாக உருவாக்கவும் கோரிக்கை வைத்தார். கோரிக்கைகளை தமிழக அரசின் பார்வைக்கு கொண்டு சென்று நிறைவேற்றுவதாக மாவட்ட ஊராட்சி தலைவர் உறுதி அளித்தார்.