கிரிகெட் கேப்டன் தோனிக்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு 41 அடி உயர கட் அவுட் வைத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துதெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இன்று 41ஆவது பிறந்த நாள் .கேப்டன்ஷிப்பில் தனித்திறமை, உலக அளவில் சிறந்த பினிஷர் உள்பட கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்துள்ளார். இதனால் அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கு மேலாக அவருக்கு 41 வயதான நிலையில், அதே உயரத்தில் கட்அவுட் வைத்து பிரமிக்கவைத்துள்ளனர் அவரது ரசிகர்கள். நடிகர்களுக்குத்தான் கட் அவுட் வைக்க வேண்டுமா என்ன? இந்தியாவுக்காக 3 ஐசிசி கோப்பைகளை வென்ற தோனிக்கு வைப்பது சரிதானே என்கின்றனர் ரசிகர்கள். விஜயவாடா மாவட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ரசிகர்கள், முன்னாள் இந்திய கேப்டனை கவுரவிக்கும் தோனி ரசிகர்கள், தோனிக்கு 41 அடி கட்அவுட்டை வைத்து வியக்கவைத்துள்ளனர்.